TUPF Requests & Demands

Ensuring the rights and welfare of trade unions and laborers through structured policies and legal protection.

📌 1. தொழிலாளர் நலன் & சமூக பாதுகாப்பு

  • 1,கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் கேட்பு மனுக்களுக்கு 30,நாட்களில் உதவித்தொகை வழங்க வேண்டும்.
  • 2,நலவாரியங்களில் ஓய்வூதியம் ரூ 3000 வழங்க வேண்டும்.
  • 3,நலவாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் மருத்துவ காப்பீடு ESI,திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
  • 4,அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களுக்கு நலநிதி லெவி1% வசூலிக்க வேண்டும்.
  • 5,நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளி ,ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்துகளுக்கு புதுப்பித்தல் இல்லை என்றாலும் உதவித்தொகை வழங்க வேண்டும்.

📌 2. தொழிற்சங்க சட்ட & கொள்கை திருத்தங்கள்

  • 1,நலவாரியங்களில் உறுப்பினர் பதிவிற்கு VAO முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
  • 2,நல வாரியங்களில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பித்தல் செய்ய பணிச்சான்று கட்டாயமாக்க வேண்டும்.
  • 3,நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளி சுயதொழில் தொடங்க ரூ 3 லட்சம் மானியத்துடன் கடன் வழங்க வேண்டும்.
  • 4,அமைப்புசாரா கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில்வீடு வழங்க வேண்டும்.
  • 5,கட்டுமான நல வாரியத்தில் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ 4,லட்சம் வாரிய நல நிதியிலிருந்து வழங்க வேண்டும்.
  • 5,நல வாரியங்களில் ஓய்வூதியம் பெரும் தொழிலாளி மரணம் அடைந்தால் இயற்கை மரண உதவித்தொகை வழங்க வேண்டும்.

📌 3. கட்டுமானத் தொழிலாளர்களின் உரிமைகள் & நலத்திட்டங்கள்

  • 1,நல வாரியங்களில் பதிவு செய்ய தொழிற்சங்கங்களுக்கு பதிவு எண் அடிப்படையில் தனி ஐடி வழங்க வேண்டும்.
  • 2,நலவாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் மருத்துவ காப்பீடு ESI,திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
  • 3,அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களுக்கு நலநிதி லெவி1% வசூல் செய்ய வேண்டும்.
  • 4,அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு என்று தனியாக அமைப்புசாரா தொழிலாளர் துறை உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும்.
  • 5,நல வாரியங்களுக்கு வாரியத் தலைவர், உறுப்பினர் தேர்வுக்கு, சட்டப்படி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட வேண்டும்.

📌 4. அரசு பொறுப்புக்கூறல் & வெளிப்படைத்தன்மை

  • 1,கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் கேட்பு மனுக்களுக்கு 30,நாட்களில் உதவித்தொகை வழங்க வேண்டும்.
  • 2,நலவாரியங்களில் ஓய்வூதியம் ரூ 3000 வழங்க வேண்டும்.
  • 3,நல வாரியங்களில்தொழிலாளி பதிவு, புதுப்பித்தல் செய்ய கட்டண வசூலிக்க வேண்டும்.
  • 4,நலவாரிய பணிகள் அனைத்தும் இணையதளம் மூலம்பதிவேற்றம் செய்வதால்,நலவாரிய அலுவலகத்திற்கு தொழிலாளி நேரில் வர வேண்டும் அழைகழிக்க படுவதை தடுக்க வேண்டும்.
  • 5,நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளி ,ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்துகளுக்கு புதுப்பித்தல் இல்லை என்றாலும் உதவித்தொகை வழங்க வேண்டும்.

📌 5. அரசிடம் உடனடி நடவடிக்கை கோரப்படும் முக்கிய கோரிக்கைகள்

  • 1, அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய இணையதளம் tnuwwb.tn.gov.in முறையாக முழுமையாக செயல்பட வேண்டும்.
  • 2,நல வாரிய அலுவலகங்களில் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு தனி அறை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
  • 3,தமிழகத்தில் உள்ள 40,நல வாரிய அலுவலகங்களும் ஒரே மாதிரி நலவாரிய பணிகளை மேற்கொள்ள உரிய தெளிவுரை வழங்க வேண்டும்.
  • 4,நல வாரியங்களில் தொழிலாளி உறுப்பினர் பதிவுக்கு விண்ணப்பித்தால் தேவையில்லாத காரணக் கூறி நிராகரிப்பதை தவிர்த்து உறுப்பினர் அட்டை வழங்கும் வரைமனுக்களை தள்ளுபடி செய்யக் கூடாது.
  • 5,நல வாரியத்தில் உறுப்பினர் பதிவு செய்ய தொழிற்சங்கத்தின் மூலம் வழங்கப்படும் பணிச்சாண்றில் தொழிற்சங்க உறுப்பினர் எண் குறிப்பிடப்பட வேண்டும்.

தமிழ்நாட்டின் தொழிற்சங்கங்களை ஒருங்கிணைத்து, வலுப்படுத்த உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு.